சென்னைல இருக்க கஸின்ஸ்லருந்து ஆரம்பிச்சு எல்லாரும் மைலாப்பூர் தமிழ் பேசுறதால இன்னிக்கும் சென்னைக்கு போனோம்னா அந்த பேச்சும் accentம் தான் இசியா வருது. ஆனா லீவுக்கு ஊருக்கு போனா சில வார்த்தைகள் வித்தியாசமா இருக்கும். அப்படி வித்தியாசமா கேள்வி பட்டிருக்க வார்த்தைகளை எல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கணும். இப்போதைக்கு உடனே ஞாபகம் வர வார்த்தை, புட்டாமாவு.
இப்ப எல்லாம் பவுடர் பூசுற வழக்கமே இல்லை, ஆனா ஸ்கூல் படிக்கிற சமயத்தில நல்லா ஸ்கூல் ரெகுலேஷன் படி ரெட்டை ஜடைய இருக்க பிடிச்சு பின்னி வெள்ளை ரிப்பன வச்சு மடிச்சு கட்டி, நட்சத்திரம் அல்லது நிலான்னு எதாச்சும் ஒரு டிசைன்ல நெத்தில பொட்டு வெச்சு, பத்தாதுக்கு கண்ணத்துல வேற ஒரு பொட்டு வெச்சு, அதுக்கு மேல பவுடர் பூசி படுத்தி வைப்பாங்க.
இந்த பவுடருக்கு ஊர்ல இருக்க பாட்டி சொல்ற பேரு, ‘புட்டாமாவு’. சென்னைய விட்டு வெளியூர் வந்ததிலருந்து நம்ம vocabularyயும் எவ்வளவோ மாறி போச்சு, எத்தனையோ வார்த்தைகள் அட நம்ம எப்பவும் சொல்றத விட இது நல்லா இருக்கேன்னு நினைச்சு அப்பப்போ பேசும் போது அந்த வார்த்தைகளை சேத்து பேசினாலும், இந்த புட்டாமாவுங்கற வார்த்தை மட்டும் சொல்ல வரமாட்டேங்குது. இன்னமும் பேச்சு வழக்குல இந்த வார்த்தை இருக்கா என்னன்னு தெரியலை.
Meyyappan பதிப்பித்தது.